Saturday, May 15, 2010

தி இத்தாலியன் ஜாப் (2003)

தி இத்தாலியன் ஜாப் (2003)


இயக்குனர்:  F.  கேரி கிரே

நடிகர்கள்:
  
 மார்க் வால்பர்க் 
சார்லஸ் தேரோன் 
டொனால்ட் சதர்லாண்ட் 
 சேத் கிரீன் 
 ஜேசன் ஸ்டேதம் 
 மோஸ் டெப்
 எட்வர்ட் நார்ட்டன்






தி இத்தாலியன் ஜாப் படத்தின் கதைப்படி, ஜான் பிரிஜர் (டொனால்ட் சதர்லாண்ட்), ஒரு திறமையான திருட்டு கும்பலின் தலைவன், அவர் கடைசியாக ஒரு கொள்ளை முயற்சியை நடத்த திட்டமிடுகிறார். அதன் படி இத்தாலி வெனிஸ் நகரத்தில் உள்ள ஒரு பாதுகாப்பு பெட்டகத்தை கொள்ளையிட திட்டமிடுகின்றனர்.  இதில் சார்லி (மார்க் வால்பர்க்) தன் திறமையான திட்டமிடுதலுக்கு பெயர் பெற்றவன், ராப் (ஜேசன் ஸ்டேத்தம்) ஒரு திறமையான டிரைவர், லெப்ட் இயர் (மோஸ் டெப்) ஒரு வெடிமருந்து நிபுணன், லைல் (சேத் கிரீன் ) ஒரு கம்ப்யூட்டர் நிபுணன், மற்றும் ஸ்டீவ் (எட்வர்ட் நார்ட்டன்) மற்றுமொரு கூட்டாளி, இந்த படத்தில் ஸ்டீவ்தான் வில்லன்.  

    

இந்த குழு பாதுகாப்பு பெட்டகத்தை வெற்றிகரமாக கொள்ளையிட்ட பின்னர், அதில் உள்ள தங்கக்கட்டிகளை எடுத்துக்கொண்டு ஜாலியாக தங்கள் காரில் செல்லும் பொழுது  ஸ்டீவ் தான் ஏற்பாடு செய்திருந்த கூலிப்படையுடன் அந்த தங்கக்கட்டிகளை எடுத்துக்கொண்டு செல்லும் பொழுது, அதில் உண்டான சண்டையில் ஜான் பிரிஜரை சுட்டு விட்டு, மற்றும் அவர்கள் வந்த கரையும் பள்ளத்தில் தள்ளி விட்டு எஸ்கேப் ஆகிறான், அந்த தங்கக்கட்டிகளை ஸ்டீவ் அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியாவுக்கு எடுத்து சென்று விடுகிறான், இதில் தான் பள்ளத்தில் தள்ளி விட்ட தனது கூட்டாளிகள் அனைவரும் இறந்திருக்க கூடும் என எண்ணுகிறான்.  ஆனால் நடந்ததோ வேறு, ஜான் பிரிஜரை தவிர மற்ற அனைவரும் தப்பி விடுகின்றனர்.

   

ஒரு வருடத்திருக்கு பிறகு, ஸ்டீவ் அமெரிக்காவில், கலிபோர்னியாவில் செட்டில் ஆகிவிடுகிறான்.  கூட்டாளிகள் அனைவரும் ஸ்டீவ்வை பழிவாங்கவும் அவனிடமுள்ள தங்கள் பங்கு தங்கக்கட்டிகளை எடுத்துக்கொள்ளவும் சமயம் பார்த்து இருக்கின்றனர்.  சார்லி இந்த விஷயத்தில் அமெரிக்காவில் உள்ள சார்லிஸ் (ஜான் பிரிஜரின் மகள்) உதவியை கேட்டு வருகிறான்.  சார்லிஸ் அமெரிக்க புலனாய்வு துறையில் பாதுகாப்பு பெட்டகங்களை கையாளும் பிரிவில் வேலை செய்து வருகிறாள்.  ஏற்கனவே தன் தந்தையின் மரணத்தால் வருதத்தில் இருக்கும் சார்லிஸ், சார்லியினுடைய இந்த திட்டத்திற்கு ஓகே சொல்கிறாள், இனி படம் முழுக்க ஒரே விறுவிறுப்புதான்.


  Edward Norton , Mark Wahlberg and Charlize Theron in Paramount's The Italian Job


தன்னிடமுள்ள தங்கக்கட்டிகளை விற்று காசாக்க முடிவு செய்கிறான் ஸ்டீவ், அதனால் ஒரு ஹவாலா ஆசாமியை நாடுகிறான், அவன் சாம்பிள் தங்கக்கட்டியை வாங்கி அது எங்கிருந்து எடுக்கப்பட்டது என ஆராய்ச்சி செய்கிறான், இதை அறிந்த ஸ்டீவ் இதனால் தனக்கு ஆபத்து வரும் என எண்ணி அவனை கொன்று விடுகிறான், இந்நிலையில் சார்லிஸை வைத்து ஸ்டீவ் வீட்டில் உள்ள பாதுகப்பு பெட்டகத்தை பற்றிய தகவல்களை அறிகின்றனர்.  ஸ்டீவ் பின்னர் சார்லிஸ், ஜான் பிரிஜர் மகள் என அறிந்து கொள்கிறான், மேலும் தனது தங்கக்கட்டிகளை எடுத்து போக சார்லியும் அவன் கூட்டாளிகளும் இருப்பதை அறிந்து , தங்கக்கட்டிகளை இடமாற்றம் செய்ய ஏற்பாடு செய்கிறான்.

Mark Wahlberg and Charlize Theron in Paramount's The Italian Job - 2003  Franky G , Jason Statham and Charlize Theron in Paramount's The Italian Job

அனைத்து தங்கக்கட்டிகளையும் மூன்று கண்டெய்னர்கள் மூலமாக அவன் வீட்டிலிருந்து வேறொரு இடத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறான், இதில் இந்த மூன்று கண்டெய்னர்கலில் ஒன்றில் மட்டுமே தங்கக்கட்டிகளை வைது அனுப்புகிறான், இந்த திட்டத்தை சார்லி அறிந்து, தனது அவனது கூட்டாளிகளுடன் அந்த தங்கக்கட்டிகளை மீட்கிறான், அந்த காட்சிகள்தான் படத்துக்கு மிகப்பெரிய பிளஸ். குறிப்பாக, அந்த தங்கக்கட்டிகளை அவர்கள் எடுக்கும் விதம் மிகவும் அருமை.  இந்த படத்தில் மினி கூப்பர் கார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  லைல் தனது கம்ப்யூட்டர் அறிவு மூலம் நகரத்தின் ட்ராப்பிக்கை மாற்றி அந்த மூன்று வண்டிகளில் தங்கம் உள்ள வண்டியை மட்டும் தனியாக பிரித்து அதை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கொண்டு வந்து, அங்கிருந்து தங்கக்கட்டிகளை மினி கூப்பர் கார்கள் மூலமாக எடுத்து செல்கின்றனர்.  இதுதான் படத்தின் கதை. 

  


இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று, 


நன்றி, என்றும் உங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

மணிவண்ணன்